CRIME
“சிறுமி இருவரை காதலித்து வந்தாரா..?!” கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி திருப்பம்… மேலும் 2 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் மேலும் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்லிச்சேரா காவல் எல்லைக்குட்பட்ட அலோய்ச்சோரா பகுதியில், குடும்பத்தினர் உறவினர் வீட்டு விழாவுக்குச் சென்றிருந்த நேரத்தில் தனியாக இருந்த சிறுமி, சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரில் 17½ வயது சிறுவன் ஒருவனும் அடங்குவான் என்பதால், குற்றத்தின் கொடூரத்தைக் கருத்தில் கொண்டு அவனையும் வயது வந்தவராகக் கருதி விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், சிறுமிக்கு அறிமுகமான இளைஞர்கள் சிலரே போன் செய்து வரவழைத்து தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கி விரைந்து நீதி வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
