CRIME
“வா பாப்பா ஐஸ்கிரீம் வாங்கி தாரேன்..” ஆசை வார்த்தை கூறி 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 43 வயது நபர் செய்த வெறிச்செயல்… திடுக்கிடும் பின்னணி..!!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடியபோது, அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் 43 வயது நபர் என்பவர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இக்கொடூரத்தைப் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றாரிடம் கூறவே, அவர்கள் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மகாதேவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
