“தாகமா இருக்கு… கொஞ்சம் தண்ணி தர்றீங்களா..?” தனியாக இருந்த பெண்ணின் ஆடையைக் கிழித்து அத்துமீறிய ஓட்டுநர்… நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவம்! – cinefeeds
Connect with us

CRIME

“தாகமா இருக்கு… கொஞ்சம் தண்ணி தர்றீங்களா..?” தனியாக இருந்த பெண்ணின் ஆடையைக் கிழித்து அத்துமீறிய ஓட்டுநர்… நெஞ்சை உலுக்கிய பகீர் சம்பவம்!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தாகமாக இருப்பதாகக் கூறிய அந்த நபரை நம்பிப் பெண் வீட்டிற்குள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற நபர் கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காப்பாற்றுமாறு சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் இருந்த நபரைத் தப்பி ஓடவிடாமல் மடக்கிப் பிடித்துச் சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மறைமலைநகரைச் சேர்ந்த 52 வயதான ஓட்டுநர் ஸ்ரீனிவாசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஸ்ரீனிவாசனை கைதான செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in