பகீர்..! கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்.. பெண்ணை சரமாரியாக தாக்கிய கள்ளக்காதலன் அங்கேயே அமர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்.. பெண்ணை சரமாரியாக தாக்கிய கள்ளக்காதலன் அங்கேயே அமர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!

Published

on

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த கொத்தனார் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பானுமதியின் மகளுக்குத் திருமணம் ஆன பிறகு, இந்த விவகாரம் அறிந்த மருமகன் எச்சரித்ததால் பானுமதி பிரபாகரனுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். எனினும் விடாமல் தொந்தரவு செய்த பிரபாகரன் மீது பானுமதி அளித்த புகாரின் பேரில், உடுமலை காவல்துறையினர் பிரபாகரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், மீண்டும் பானுமதியைச் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், பானுமதி அவரது அழைப்புகளைப் புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த பிரபாகரன், இரவு நேரத்தில் பானுமதியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு தன் மீது அளித்த வழக்கைத் திரும்பப் பெறுமாறும், பானுமதியின் பெயரில் தனக்குச் புதிய ‘சிம் கார்டு’ வாங்கித் தருமாறும் வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், வீட்டிலிருந்த மண்வெட்டியால் பானுமதியின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

Advertisement

இதைத் தடுக்க முயன்ற மயில்சாமி என்பவரையும் பிரபாகரன் கல்லால் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உடுமலை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பானுமதியைக் கொலை செய்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்த பிரபாகரனைக் கைது செய்தனர். படுகாயமடைந்த மயில்சாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பானுமதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in