CRIME
கல்யாணமான 5 மாசத்துல இப்படியா..? கட்டிலில் இருந்து தள்ளிவிட்டு கணவன் கொலை… அந்த ஆத்திரத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்… புதுமாப்பிள்ளை பலியான கொடூரப் பின்னணி..!!
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரியில் சேருவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கட்டிலில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்த மனைவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கோஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசி பிகா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார் (23) என்ற வாலிபர் கடந்த ஜூலை 4-ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று தான் நடந்து முடிந்துள்ளது.
ஆரம்பத்தில், தனது கணவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது மனைவி பல்லவி குமாரி போலீசில் புகார் அளித்தார். ஆனால், சன்னியின் கழுத்தில் இருந்த காயங்கள் மற்றும் சம்பவ இடத்தின் சூழல் ஆகியவை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான விசாரணை மற்றும் தம்பதியினருக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோ ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் போலீஸார் பல்லவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பல்லவி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பியதும், அதற்கு சன்னி குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சன்னி தனது மனைவியைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்லவி, சன்னியின் கழுத்தில் இருந்த தாயத்து கயிற்றைப் பிடித்து பலமாகத் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி சுவற்றில் மோதி மயங்கி விழுந்த சன்னி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்லவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
