LATEST NEWS
“ஐய்யோ அப்பா இனி நான் பீட்சா, பர்க்கர் சாப்பிட மாட்டேன்” என் வயித்துல இவ்ளோ புழுவா.? தந்தை செய்த ‘அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்’ நாடகம்.. பயத்தில் அலறிய மகள்..!!
வெளிநாட்டு மற்றும் துரித உணவுகளான பீட்சா, மோமோஸ், சௌமீன், பர்கர் போன்றவற்றை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறுமி, தனது தாய் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை முற்றிலும் வெறுத்து வந்தாள். தொடர்ந்து இது போன்ற ஜங்க் உணவுகளைச் சாப்பிட்டு வந்ததால், ஒரு நாள் அவளுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட மகளைக் கண்டு அவளது பெற்றோர் மிகுந்த கவலையடைந்தனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த தந்தை, நிலைமையைப் புரிந்து கொண்டு அவளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். அவர் தனது பையிலிருந்து லேப்டாப் மற்றும் மவுஸை வெளியே எடுத்து, “இன்று நாம் உன்னுடைய வயிற்றை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார். பின்னர், மவுஸை அவளது வயிற்றில் நகர்த்தி ஸ்கேன் செய்வது போல நடித்து, லேப்டாப் திரையின் மூலம் அவளுக்குப் புரிய வைத்தார்.
https://www.instagram.com/reel/DboHr6OshJ_/?utm_source=ig_web_button_share_sheet
அதிகப்படியான வெளி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டதால் அவளது வயிற்றில் புழுக்கள் (Worms) உருவாகியுள்ளன என்பதை அவர் லேப்டாப் திரையைக் காட்டி அன்போடு விளக்கினார். இதைப் பார்த்த சிறுமி பயந்துபோனாள். தன் தவறை உணர்ந்த அவள், அன்றிலிருந்து வெளி உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு, தனது தாய் சமைக்கும் சத்தான வீட்டு உணவுகளை மகிழ்ச்சியோடு சாப்பிடத் தொடங்கினாள்.
