CRIME
“உன் அப்பா கூப்பிடுறார்”பள்ளியிலிருந்து 8 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து… அலறியதால் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூரில் 8 வயது சிறுமி ஒருவர் அண்டை வீட்டுக்காரரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமியிடம் அனில் யாதவ் (என்ற அன்னு – 28) என்ற நபர், “உன் அப்பா உன்னை அழைக்கிறார்” என்று கூறி பள்ளியில் இருந்து ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பா கூப்பிடுவதாக நினைத்து அவனுடன் சென்ற சிறுமியை, அந்த நபர் அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்கு அவளைப் பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுமி பயந்து சத்தமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் கீழ் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதையே இந்தத் துயரச் சம்பவம் காட்டுவதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
