சாகும்போது என்னத்த கொண்டுபோக போறோம்.? “இதுதாங்க மனிதநேயம்” துபாய் மாலில் இந்தியச் சிறுமிக்கு நேர்ந்த விபத்து… அடுத்த நாள் வந்த ‘அந்த’ ஒரு போன் கால்.. நெகிழ்ந்துபோய் நெட்டிசன்களிடம் பகிர்ந்த தந்தை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாகும்போது என்னத்த கொண்டுபோக போறோம்.? “இதுதாங்க மனிதநேயம்” துபாய் மாலில் இந்தியச் சிறுமிக்கு நேர்ந்த விபத்து… அடுத்த நாள் வந்த ‘அந்த’ ஒரு போன் கால்.. நெகிழ்ந்துபோய் நெட்டிசன்களிடம் பகிர்ந்த தந்தை..!!

Published

on

துபாயில் வசிக்கும் ரவி சவுகான் என்ற இந்திய நபர், அங்குள்ள பிரபல ‘மால் ஆஃப் தி எமிரேட்ஸ்’ வணிக வளாகத்திற்குத் தனது ஐந்து வயது மகள் அதீராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் அருகே அந்தச் சிறுமி வழுக்கி விழுந்துள்ளார். இதனால் சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டு அழுதுள்ளார். இதைப் பார்த்த மாலின் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து சிறுமிக்கு முதலுதவி செய்துள்ளனர். மேலும், சிறுமியின் காயத்திற்கு பேண்டேஜ் போட்டு, அவளது அழுகையை நிறுத்த ஒரு சாக்லேட்டையும் கொடுத்து தேற்றியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் இந்த உடனடி உதவியால் சிறுமி குணமடைந்ததைத் தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் தங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உண்மையான ஆச்சரியம் அடுத்த நாள் தான் காத்துக்கொண்டிருந்தது. மறுநாள் காலையில் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து ரவி சவுகானுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஊழியர்கள், நேற்று காயமடைந்த சிறுமி அதீரா இப்போது எப்படி இருக்கிறார், அவரது உடல்நிலை நன்றாக உள்ளதா என்று மிகவும் அக்கறையுடன் விசாரித்துள்ளனர்.

Advertisement

https://www.instagram.com/reel/Dbn6MyCI_wc/?utm_source=ig_web_button_share_sheet

மால் ஊழியர்களின் இந்த அன்பான மற்றும் பொறுப்பான நெகிழ்ச்சியான செயல் ரவி சவுகானை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “மக்கள் பொதுவாக துபாயின் பிரம்மாண்டக் கட்டிடங்கள், ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் வாய்ப்புகள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் உலகெங்கிலும் கிடைக்காத இதுபோன்ற சிறிய மற்றும் அன்பான மனிதநேயமிக்க செயல்கள்தான் துபாயை மற்ற நகரங்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது; என்னை இந்த நகரத்தை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in