LATEST NEWS
“பணம் கேட்டது குத்தமா..?” கன்னத்தில் அறைந்து மண்டையை உடைத்த விடுதி கும்பல்.. பிருந்தாவன் விடுதியில் அரங்கேறிய கொடூர அராஜகம்.. கண்ணீருடன் கதறிய பெண் வெளியிட்ட பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன், சைதன்யா விஹார் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் முன்பதிவு செய்த தொகையைத் திரும்பக் கேட்ட இளம் பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதி நிர்வாகியும் அவரது ஆட்களும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் செலுத்திய முன் பணத்தைத் திரும்பத் தருமாறு அப்பெண் கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், விடுதி உரிமையாளரின் ஆள் ஒருவன் அப்பெண்ணின் கன்னத்தில் அறைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளான். இந்தத் தாக்குதலைத் தட்டிக்கேட்கவும், அப்பெண்ணைக் காப்பாற்றவும் முயன்ற அவரது நண்பர்கள் மீது விடுதி தரப்பினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், சிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளனர்.
‘उसके बंदे ने सीधा मेरे पर हाथ छोड़ा..’ एडवांस पैसे वापस मांगने पर युवती को जड़ा थप्पड़!
मथुरा: थाना वृंदावन कोतवाली क्षेत्र के चैतन्य बिहार में गेस्ट हाउस संचालक ने एडवांस रकम लौटाने से इनकार करते हुए युवती के साथ बदसलूकी की.
युवती को बचाने आए उसके साथियों पर भी हमला कर दिया… pic.twitter.com/n1bgUY7bvK— News Leader (@NewsLeaderLive) August 7, 2026
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் விடுதி ஊழியர்களின் வன்முறைச் செயல்களைக் கண்ணீருடன் விவரித்துள்ளார். புனிதத் தலமான பிருந்தாவனிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பக்தர்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
