CRIME
“போலீஸா? இல்லை ரவுடிகளா..?” காவலர்கள் செய்த அந்த ஒரு காரியம்.. இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் பெண்ணின் கண்ணீர் வீடியோ..!!
மகாராஷ்டிராவின் நல்லாசோபாராவைச் சேர்ந்த பிங்கி பாண்டே என்ற இரண்டு குழந்தைகளின் தாய், தனக்கு நேர்ந்த அநீதி குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல் நிலையத்திற்குள்ளேயே போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சில நபர்கள் பிங்கியைத் துன்புறுத்தி தாக்கியதால், அவர் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால், போலீசார் முதலில் சாதாரண என்.சி.ஆர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்; பின்னர் மகளிர் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த காவல் நிலையப் பொறுப்பாளர், வழக்கை வாபஸ் பெறுமாறு பிங்கியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், காவல் நிலையத்திற்குள் இருந்த அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து அவரை லத்திகளால் இடுப்பு மற்றும் முகத்தில் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
इस महिला का नाम पिंकी पांडे है यह नालासोपारा की रहने वाली है, इसके साथ कुछ लोगों ने छेड़छाड़ की ओर इसके साथ मारपीट किया गया।
जब पिंकी पांडे न्याय मांगने के लिए थाने पहुंची तो पहले NCR दर्ज किए, उसके बाद महिला आयोग के हस्तक्षेप के बाद FIR दर्ज हुई।
पिंकी का आरोप है कि – FIR के… pic.twitter.com/7uYTXIE2wP— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 20, 2026
இந்தக் கொடூரத் தாக்குதலால் பிங்கி பாண்டே தற்போது சரியாக நடக்கக் கூட முடியாமல் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் தங்களைத் தாக்கியதை வீடியோ எடுக்க முயன்றபோது, அவரது மொபைல் போனையும் போலீசார் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்துள்ளனர். சட்டத்தைக் காக்க வேண்டிய போலீசாரே தங்களைப் பாதுகாப்பற்ற முறையில் தாக்கியுள்ளதாகவும் தனக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என என்று அந்த பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
