LATEST NEWS
கலெக்டர் ஆபீஸில் நெகிழ்ச்சி..! விவசாயி கொடுத்த ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’… திகைத்து நின்ற ஆட்சியர்.. என்ன கொடுத்தார் தெரியுமா..? இணையத்தில் இதயங்களை வெல்லும் வீடியோ…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பா தாலுகாவிற்குட்பட்ட பஸாய் அலேரா கிராமத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வந்த நில அளவை தொடர்பான பிரச்சனை, மாவட்ட ஆட்சியரின் நேரடி தலையீட்டால் ஒருவழியாகத் தீர்த்து வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த தனது பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த விவசாயி ஒருவர், மக்கள் குறைதீர்க்கும் முகாமின் போது நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். நன்றிக்கடனாகத் தனது வயலில் விளைந்த சுரைக்காய், பாகற்காய், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை நாட்டுக்காய் போன்ற காய்கறியைச் சேகரித்து எடுத்துக்கொண்டு ஆட்சியரைச் சந்திக்கச் சென்றார்.
आगरा से दिल छू लेने वाली खबर..
3 साल से अटकी जमीन की पैमाइश हुई तो डीएम को अपने खेत की सब्जी ‘ककोड़े’ उपहार में देने पहुंचा किसान!
बाह तहसील के बसई अलेरा में जमीन की पैमाइश का मामला पिछले 3 वर्षों से लंबित था, जिसे डीएम के हस्तक्षेप के बाद सुलझा लिया गया.
समस्या हल होने से खुश… pic.twitter.com/ZzcTXzWce4— News Leader (@NewsLeaderLive) August 7, 2026
மாவட்ட ஆட்சியர் மணீஷ் பன்சல், அந்த விவசாயியின் அன்பையும் நன்றியையும் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதோடு, அவர் பரிசாகக் கொண்டு வந்த ககோரா காய்கறியை மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். அரசு அதிகாரியும் எளிய விவசாயியும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொண்ட இந்த அழகான தருணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.
