“அடச்சீ… நீயெல்லாம் கணவனா..?” பணத்திற்காகக் காதலித்து கரம்பிடித்தவளையே பலிகடா ஆக்கிய கொடூரன்.. கொலையாளி கணவனைச் சிக்க வைத்த ‘அந்த’ சீக்ரெட் எவிடென்ஸ்.. போலிஸாரையே அலறவைத்த அதிர்ச்சித் திருப்பம்! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ… நீயெல்லாம் கணவனா..?” பணத்திற்காகக் காதலித்து கரம்பிடித்தவளையே பலிகடா ஆக்கிய கொடூரன்.. கொலையாளி கணவனைச் சிக்க வைத்த ‘அந்த’ சீக்ரெட் எவிடென்ஸ்.. போலிஸாரையே அலறவைத்த அதிர்ச்சித் திருப்பம்!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து என அனைவரும் நினைத்த நிலையில், பின்னணியில் 44 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை அடைவதற்காக அவரது கணவரால் தீட்டப்பட்ட கொடூர சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட அமர் சிங் என்ற கணவன், தனது மனைவியைக் கொலை செய்து விபத்து என நாடகமாடி காப்பீட்டுப் பணத்தைப் பெற முயன்றதுடன், மனைவியைக் காணவில்லை எனப் போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

திட்டமிட்டபடி, மனைவியை குறிப்பிட்ட சாலைக்கு அழைத்து வந்த அமர் சிங், அங்கு ஏற்கனவே காரோடு காத்திருந்த தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் இணைந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார். வேகமாகக் வந்த கார் ரீட்டா மீது மோதியதில் அவர் சாலை ஓரப் பள்ளத்தில் விழுந்தார். பின்னர் அவரை மீட்டு மீண்டும் சாலையில் கிடத்தி, அவர் மீது காரை ஏற்றி கொடூரமாகக் கொன்றுவிட்டு விபத்து போலக் காட்டி தப்பியுள்ளனர். ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்த ஒரு வங்கிச் சீட்டு மற்றும் தீவிர கண்காணிப்பு, தொழில்நுட்ப விசாரணையின் மூலம் 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் உண்மையைக் கண்டறிந்தனர்.

Advertisement

It initially appeared to be an accident. A 32-year-old woman in Uttar Pradesh’s Hamirpur was fatally hit by a car and her crushed body was later discovered on the roadside by passing farmers. However, what emerged further was a meticulous plan hatched by her husband and his… pic.twitter.com/WqbNTNvlGH— Hate Detector 🔍 (@HateDetectors) August 7, 2026

விசாரணையில், கடன் தொகையை அடைக்கவும், இன்சூரன்ஸ் தொகையான 44 லட்சம் ரூபாயில் அமர் சிங் 15 லட்சத்தையும், மீதமுள்ள தொகையைக் கூட்டாளிகள் பிரித்துக் கொள்ளவும் ஒப்பந்தம் போட்டது தெரியவந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இது ரீட்டாவிற்கு இரண்டாவது திருமணமும், அமர் சிங்கிற்கு மூன்றாவது திருமணமும் ஆகும். தற்போது அமர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அமித் குப்தா, புஷ்பேந்திர சோனி, அபய் சிங் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in