CRIME
பகீர்..! கௌரவம் பெரிதா..? பெற்ற மகள் பெரிதா.? நாட்டைக் காக்கும் வீரரைக் காதலித்த குற்றம்: 22 ஆண்டுகள் வளர்த்த மகளை வெட்டிக் கொன்ற தந்தை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 22 வயதான அங்கிதா சர்மா, இந்திய-திபெத் எல்லைக் காவல் படையில் நாட்டைப் பாதுகாக்கும் ஒரு வீரரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காத சூழலில், அவர் தனது விருப்பப்படி அந்த ராணுவ வீரரை நீதிமன்றத் திருமணம் செய்து கொண்டார். தாய்நாட்டிற்குச் சேவை செய்யும் ஒரு வீரரைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து, புது வாழ்வைத் தொடங்கும் நம்பிக்கையோடு அங்கிதா இந்த முடிவை எடுத்தார்.
ஆனால், மகள் தன் விருப்பப்படி வாழத் தொடங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத அவருடைய தந்தை, இதைத் தனது குடும்பத்தின் கௌரவத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகக் கருதினார். 22 ஆண்டுகள் அன்போடு வளர்த்த மகளின் உணர்வுகளையும், அவர் தேர்ந்தெடுத்த நபர் நாட்டைப் காக்கும் ஒரு நேர்மையான வீரர் என்பதையும் தாண்டி, சமூகத்தில் தன் “போலி கௌரவம்” பாதிக்கப்பட்டு விட்டதே என்ற ஆத்திரமே அந்தத் தந்தையின் மனதில் மேலோங்கி நின்றது.
இந்த ஆத்திரத்தின் உச்சக்கட்டமாக, பெற்ற மகளையே அந்தத் தந்தை படுகொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் சொந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்ற அடிப்படை உரிமையையும், ஒரு வீரருக்குரிய மரியாதையையும் மறந்து, ‘கௌரவக் கொலை’ என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சம்பவம் மனிதநேயத்தையும் சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
