CRIME
“அடக்கொடுமையே..! பெற்ற மகளுக்கு எமனாக மாறிய தந்தை..” போதையில் வந்த ஆசாமி செய்த வெறித்தனமான காரியம்… இணையத்தை உலுக்கும் தாயின் கதறல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கர்னல்கஞ்ச் பகுதியில், குடிபோதையில் இருந்த தந்தை பிரமோத் குமார் கௌதம் என்பவரால் அவரது 6 வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் வீட்டிற்கு வந்த அந்த நபர், சற்றும் மனிதாபிமானமின்றித் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த வெறித்தனமான தாக்குதலின் போது படுகாயமடைந்த அந்தப் பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தால் உடைந்துபோன தாய் கதறி அழும் நெஞ்சை உருக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களை உலுக்கி வருகிறது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற மகளையே அடித்துக் கொன்ற அந்தத் தந்தையைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையில் போதை ஆசாமியால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோன இந்தச் சோகச் சம்பவம் சோசியல் மீடியாவில் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது
