அய்யோ கடவுளே.. விநாயகர் சிலையோடு மூசி நதியில் விழுந்த வாலிபர்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே.. விநாயகர் சிலையோடு மூசி நதியில் விழுந்த வாலிபர்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சங்கர்பள்ளி அருகே நடைபெற்ற விநாயகர் விசர்ஜனத்தின் போது, இளைஞர் ஒருவர் விநாயகர் சிலையுடன் சேர்த்து மூசி நதியில் விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்தில் சிலையைக் கரைக்காமல், மற்றொரு ஆபத்தான இடத்தில் இளைஞர்கள் சிலர் சிலையைக் கரைக்க முயன்றுள்ளனர். அப்போது அதிகாரிகள் தடுத்ததையும் மீறிச் சிலையைக் கரைத்த போது, சிலையிலிருந்த இரும்பு கம்பி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த இளைஞரின் டி-சர்ட்டில் சிக்கிக்கொண்டதால், சிலையோடு சேர்ந்து அவரும் நதிக்குள் விழுந்தார்.

நல்வாய்ப்பாக, அந்தப் பகுதியில் நதியின் ஆழம் மிகவும் குறைவாக இருந்ததாலும், தண்ணீரின் அளவு குறைவாக இருந்ததாலும் அந்த இளைஞர் எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக உயிர் தப்பினார். பாலத்திலிருந்து அவர் கீழே விழுந்ததாக பரவிய வதந்திகளுக்கு மத்தியில், அவர் நதிக்குள் விழுந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் உண்மைக் காட்சிகள் அங்கிருந்தவர்களின் மொபைல் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விதிகளை மீறி ஆபத்தான முறையில் செயல்பட்ட அந்த இளைஞர்கள் மீது தற்போது நகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in