LATEST NEWS
“ஏன்டா இப்படி பண்றீங்க..?” ஒரே பைக்கில் பறந்த 6 பள்ளி மாணவர்கள்.. தோள் மீது அமர்ந்து ‘மரணப் பயணம்’ செய்த விபரீதம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ஒரே மோட்டார் சைக்கிளில் 6 முதல் 7 பள்ளி மாணவர்கள் எவ்விதப் பாதுகாப்பு விதிகளுமின்றி, ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது தீயாய் பரவி வருகிறது. இந்த ஆபத்தானப் பயணத்தின் போது, ஒரு மாணவர் மற்றொரு மாணவரின் தோள் மீது அமர்ந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்டது பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்துள்ளது. இந்த விபரீதச் செயல், அவர்கள் தங்களது சொந்த உயிருக்கு மட்டுமன்றி சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு, அராஜகமான முறையில் ‘மரணப் பயணம்’ மேற்கொண்ட இந்த மாணவர்கள் தங்களது தவறுக்கு எந்த அளவிற்குப் பொறுப்பானவர்களோ, அதே அளவிற்கு இவர்களது பெற்றோர்களும் சமமான பொறுப்பாவார்கள். தங்களது பிள்ளைகள் எங்குச் செல்கிறார்கள், எப்படிச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கத் தவறிய இத்தகைய பெற்றோர்களின் அலட்சியமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாகும். ஒரு பெரிய விபத்து நடக்கும் வரை காத்திருக்காமல், தங்களது பிள்ளைகளுக்குச் சாலை விதிகளைப் பெற்றோர் கண்டிப்பாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
