CRIME
“அடக்கடவுளே.. வீட்டின் முற்றத்தில் இருந்த ‘அந்த’ ஒரு பேராபத்து..” 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் கம்மம்மாவட்டம் கொனிஜெர்லா மண்டலத்தில் உள்ள சின்னமுனகாலா கிராமத்தில், நேற்று மாலை மின்சார எர்த் கசிவு காரணமாக 9 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இல்லேந்துலா ரமேஷ் – மமதா தம்பதியரின் 9 மாத மகனான அவாய்த் என்ற அந்தக் குழந்தை, வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு மழையின் காரணமாக எர்த் பைப் மீது அமைக்கப்பட்டிருந்த ஸ்டீல் சிங்க்/தட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை, விளையாட்டாக அதைத் தொட்டவுடன் பலத்த மின்சார அதிர்ச்சி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தது.
குழந்தை மயங்கி விழுந்ததைக் கண்டு பதறியடித்த குடும்பத்தினர், அவனை உடனடியாக மீட்டு கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். தவழ்ந்து விளையாடும் வயதில் ஒரு பச்சிளம் குழந்தை தன் கண்முன்னே மரணத்தைச் சந்தித்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் வீடுகளில் உள்ள எர்த் லைன்கள் மற்றும் திறந்தவெளிக் கம்பிகள் குறித்துக் காட்டும் அலட்சியம் எவ்வளவு பெரிய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகக் கொடூரமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
