CRIME
க்ளோஸ் செய்யப் பார்த்த வழக்கை உலுக்கிய AI.. 10 சிறுமிகள் கொடுத்த மரண வாக்குமூலம்.. முக்கிய புள்ளிகளை அடுத்தடுத்து தூக்கப் போகும் போலீஸ்… சூடுபிடிக்கும் வீரமணி வழக்கு..!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட 10 சிறுமிகளைப் போலீசார் கண்டறிந்து அவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது தற்போதைய விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டையில் வாடகை வீடு எடுத்து, படிக்க வைப்பதாகக் கூறி 6 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை ஏமாற்றி இந்த கொடூர பாலியல் அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது
முன்னதாக, பாலியல் வன்கொடுமை தொடர்பாகக் கிடைத்த வீடியோ ஆதாரங்களில் இருந்த சிறுமிகளைத் தொடக்கத்தில் அடையாளம் காண முடியாததால், இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியாத சூழலில், ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடியோவில் இருந்த சிறுமிகளைப் போலீசார் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 சிறுமிகளும், தங்களை மிரட்டியது குறித்தும், இந்த கொடூர சம்பவங்கள் குறித்தும் தற்போது போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, முன்னாள் ஊழியர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறுமிகள் அளித்துள்ள அதிரடி வாக்குமூலங்களின் அடிப்படையில், சிறுமிகளை அழைத்துச் சென்ற இடைத்தரகர்கள் மற்றும் இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த பல முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
