LATEST NEWS
இனி ஏமாத்த முடியாது.. போலி ஏ.ஐ. வீடியோக்களை இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ் அப்பில் வந்தாச்சு புது சூப்பர் வசதி..!!
வாட்ஸ்அப் செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாகக் கண்டறியும் வகையில், ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்’ என்ற புதிய சூப்பர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இணையத்தில் போலி மற்றும் ஏ.ஐ. உள்ளடக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள இந்த அம்சம் பெரிதும் உதவும்.
தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களின் சோதனைப் பதிப்பில் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேனல்களில் பகிரப்படும் மீடியா ஃபைல்களுக்கு இந்த அம்சம் முதன்மையாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்ததும், வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள் தாங்கள் பதிவிடும் கன்டென்ட் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது என்றால், அதற்கான லேபிளைத் தாங்களாகவே உறுதி செய்து சேர்க்கலாம். ஒருமுறை இந்த லேபிள் சேர்க்கப்பட்டுவிட்டால், அதை அதன் பிறகு நீக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் சில நாடுகளில் ஏ.ஐ. உள்ளடக்கங்களை அடையாளப்படுத்துவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டு வருவதால், அதற்கு இணங்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த புதிய அம்சம் அனைத்து பொதுப் பயனர்களுக்கும் எப்போது முழுமையாகக் கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
