LATEST NEWS
வாட்ஸ்அப்பில் தொடங்கிய கள்ளக்காதல்… மாங்கல்யம் காட்டித்தந்த ரகசியம் … பிற வாலிபர்களுடன் பழகியதால் 46 வயது பெண் நள்ளிரவில் வெட்டிப் படுகொலை..!!
வாட்ஸ்அப் மூலம் ஏற்பட்ட பழக்கம், திருமணத்தை மீறிய உறவாக மாறி, இறுதியில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் 46 வயதுப் பெண்ணான கௌரவ்வா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை போலீசார் அதிரடியாக விசாரித்து உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். கால்நடை திருடர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவின் மூலமாக, கதக் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் தல்வார் (21) என்ற இளைஞருடன் கௌரவ்வாவிற்கு முதன்முதலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்தை மீறிய கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, கௌரவ்வா பெலகாவியிலிருந்து கதக் மாவட்டத்திற்குச் சென்று பிரகாஷைத் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். ஆனால், கௌரவ்வா மற்ற இளைஞர்களுடனும் நெருக்கமாகப் பழகுவதை பிரகாஷ் தல்வாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கௌரவ்வா கதக் பகுதிக்கு வந்தபோது, பிரகாஷ் அவரைத் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்து, உடலை விவசாய நிலத்தில் இருந்த ஒரு தண்ணீர் குழிக்குள் வீசிச் சென்றுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு கௌரவ்வாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டபோது, அவரை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இறுதியில், அவரது உடலில் இருந்த மாங்கல்யத்தை வைத்து அவர் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பெண் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன் பின்னர் அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்ததில் பிரகாஷ் தல்வாரின் தொடர்பு அம்பலமானது. போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து விசாரித்தபோது, கௌரவ்வாவுக்கு மற்ற இளைஞர்களுடன் இருந்த தொடர்பைத் சகித்துக்கொள்ள முடியாமல் தான் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
