“திக் திக் திக்..!” ரயிலில் பயணம் செய்த போது நேர்ந்த கொடூரம்.. வலியால் துடிதுடித்த 20 வயது இளைஞர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“திக் திக் திக்..!” ரயிலில் பயணம் செய்த போது நேர்ந்த கொடூரம்.. வலியால் துடிதுடித்த 20 வயது இளைஞர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசனம் செய்வதற்காகத் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலிருந்து தமிழகம் வந்த சௌபல்யா தன்ராஜ் (20) மற்றும் கௌதீன் சென்ஹீ (23) ஆகிய இரண்டு இளைஞர்களின் கால்களும், ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்தபோது பிளாட்பாரத்தில் மோதி துண்டான நெஞ்சை பதறவைக்கும் விபரீதம் அரங்கேறியுள்ளது,. இவ்விரு இளைஞர்களும் புரூஸ்லியா – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி டு விழுப்புரம் மார்க்கத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ரயிலின் வாசலில் அமர்ந்து தங்களது கால்களை வெளியே தொங்கவிட்டபடி வந்துள்ளனர். அப்போது ரயில் கண்ணமங்கலம் ரயில்வே பிளாட்பாரத்தை நெருங்குவதைச் சற்றும் கவனிக்காததால், இவர்களது கால்கள் பிளாட்பார சுவரில் மிகப்பலமாக மோதியுள்ளன.

இந்தக் கொடூரமான மோதலில் இரண்டு வாலிபர்களின் கால்களும் கணநேரத்தில் துண்டாகி ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர்கள் வலியால் துடிதுடித்துள்ளனர். விபத்தைக் கண்டதும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பயணிகள் யாரும் ரயிலின் படியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in