“போயும் போய் முட்டைக்கு பயப்படலாமா..?” பெண் எம்பி-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்ததால்.. மனு வாபஸ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போயும் போய் முட்டைக்கு பயப்படலாமா..?” பெண் எம்பி-க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்ததால்.. மனு வாபஸ்…!!

Published

on

ஏற்கெனவே தன் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீவிரமாக விசாரித்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், “அரசியலுக்கு வந்த பிறகு போயும் போய் முட்டை வீச்சுக்கு எல்லாம் ஒரு எம்பி பயப்படலாமா?” என்று கேள்வி எழுப்பி மஹுவா மொய்த்ராவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி மற்றும் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in