“படிக்கும்போது போன் எடுத்தா அம்மாகிட்ட மாட்டிவிடும்” கோடிங் இல்லாமல் 13 வயது சிறுமி உருவாக்கிய ஏ.ஐ. செயலி… 3 நாளில் ரூ.2.5 லட்சம் அள்ளிய மாஸ் டெக்னிக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“படிக்கும்போது போன் எடுத்தா அம்மாகிட்ட மாட்டிவிடும்” கோடிங் இல்லாமல் 13 வயது சிறுமி உருவாக்கிய ஏ.ஐ. செயலி… 3 நாளில் ரூ.2.5 லட்சம் அள்ளிய மாஸ் டெக்னிக்..!!

Published

on

சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியான ஜூ ஷூஹான், எந்தவித கோடிங் (Coding) அறிவும் இல்லாமல் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு ‘ஸாய் சாங்’ என்ற புதிய படிப்பை கண்காணிக்கும் செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் பெற்றோர்கள் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவதைக் கண்டு, தனது சொந்த தனிமை அனுபவத்தின் அடிப்படையில் ஜூ இந்த யோசனையை உருவாக்கியுள்ளார். தனக்கு ப்ரோகிரமிங் தெரியாததால், ஒரு பெரிய மொழி மாதிரியிடம் தனது யோசனையை விவரித்து இந்த செயலியை அவர் வடிவமைத்துள்ளார்.

இந்த ஏ.ஐ செயலி, குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதை மிகவும் துல்லியமாகக் கண்காணிக்கப் பயன்படுகிறது. பெற்றோர்கள் தங்களின் புகைப்படத்தை இதில் பதிவேற்றம் செய்த பின்பு, குழந்தைகள் படிக்கும் போது மொபைலில் விளையாடினாலோ அல்லது இருக்கையை விட்டு எழுந்து சென்றாலோ, கேமரா அதை உடனடியாகக் கண்டறிந்து பெற்றோர்களுக்குக் குரல் வழி நினைவூட்டலை அனுப்பிவிடும். குழந்தைகளின் படிப்பு நேரம் முடிந்ததும், அவர்கள் எவ்வளவு நேரம் கவனச்சிதறல் இல்லாமல் படித்தார்கள் என்பது குறித்த முழுமையான அறிக்கையையும் இந்த செயலி தயார் செய்து வழங்கி விடுகிறது.

Advertisement

சமீபத்தில் ஹாங்சோவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏ.ஐ. தயாரிப்பு சந்தைப்படுத்துதல் போட்டியில் இந்த செயலி காட்சிப்படுத்தப்பட்டது. தயாரிப்புகள் ஈட்டிய வருவாயின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட இப்போட்டியில், ஜூவின் செயலி வெறும் மூன்றே நாட்களில் 90 ஆர்டர்களைப் பெற்று ரூபாய் 2.5 லட்சம் வருவாயை ஈட்டி அசத்தியது. இந்த அசாத்திய திறமையால் போட்டியில் 3-ம் இடம் பிடித்து ரூ.70,000 ரொக்கப் பரிசையும் வென்ற இந்த சிறுமி, தான் ஈட்டிய ஒட்டுமொத்த தொகையையும் தனது பெற்றோரிடம் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in