வேற வழி இல்ல..! “தவெக-வில் சீட் கிடைக்காது” தடம் மாறிய தோப்பு வெங்கடாசலம்… இபிஎஸ் காட்டிய கிரீன் சிக்னலால் தாய் கழகத்திற்கு ரிட்டர்ன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேற வழி இல்ல..! “தவெக-வில் சீட் கிடைக்காது” தடம் மாறிய தோப்பு வெங்கடாசலம்… இபிஎஸ் காட்டிய கிரீன் சிக்னலால் தாய் கழகத்திற்கு ரிட்டர்ன்..!!

Published

on

திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படலாம் என்று அவர் முதலில் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு ஏற்கனவே பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அவர்களின் அரசியல் எதிரியான ஈரோடு ஜே.சி.டி.பிரபாகரன் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் போன்றோர் செல்வாக்குடன் இருப்பதால், வரும் தேர்தலில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று அவர் கணித்துள்ளார்.

இதன் காரணமாக, தவெக-வில் இணைவதைத் தவிர்த்துவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் தோப்பு வெங்கடாசலம் தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், “முதலில் தங்குதடையின்றி கட்சியில் வந்து சேருங்கள், மற்ற விவகாரங்களை பின்னர் விரிவாகப் பேசிக்கொள்ளலாம்” என்று இபிஎஸ் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக அறிவாலய மற்றும் எடப்பாடி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in