“அவர் என்ன விட்டு விலகிப்போறாரு” பேசாமல் ரசிகர் மன்றத் தலைவராகவே இருந்திருக்கலாம்… சட்டமன்றத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்ந… விஜய் மீது அதிருப்தியில் அமைச்சர் ஆனந்த்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர் என்ன விட்டு விலகிப்போறாரு” பேசாமல் ரசிகர் மன்றத் தலைவராகவே இருந்திருக்கலாம்… சட்டமன்றத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்ந… விஜய் மீது அதிருப்தியில் அமைச்சர் ஆனந்த்..!!

Published

on

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தன்னைவிட்டு மெல்ல விலகிச் செல்வதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் போது, மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் மற்றும் அண்மைக்காலமாக தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் நெருக்கமாக அமர்ந்து ஆலோசித்ததை ஆனந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கட்சிக்காக ஆரம்பக் காலம் முதலே உழைத்த தனக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கே தற்போதைய ஆட்சி மற்றும் அதிகார மையத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் அரசியல் மாற்றங்கள் மற்றும் புதியவர்களின் ஆதிக்கம் தவெகவின் மிக முக்கிய தூணாகக் கருதப்படும் ஆனந்த் தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்த அதிரடித் திருப்பங்களால் மனமுடைந்த என். ஆனந்த், இந்த அளவிற்குப் பதவிகளுக்காகப் போட்டி போடும் அரசியலுக்கு வந்ததற்குப் பதிலாக, பேசாமல் விஜய் ரசிகர் மன்ற தலைவராகவே மட்டும் இருந்திருக்கலாம் என்று தனது மிக நெருக்கமான வட்டாரங்களிடம் மிகுந்த மனவேதனையுடன் வெளிப்படுத்தியதாகத் தவெக உட்கட்சித் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in