“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா..?” திருமண நாளில் நாத்தனார் செய்த அசுர வெறியாட்டம்.. புற்றுநோயில் இருந்து மீண்ட மணமகளுக்கு நேர்ந்த கொடுமை… நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா..?” திருமண நாளில் நாத்தனார் செய்த அசுர வெறியாட்டம்.. புற்றுநோயில் இருந்து மீண்ட மணமகளுக்கு நேர்ந்த கொடுமை… நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!

Published

on

புற்றுநோய் பாதிப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த மணமகள் ஒருவரின் வாழ்க்கையில், அவரது மாபெரும் மகிழ்ச்சியான திருமண நல்நாளில் நாத்தனார்செய்த கொடூரமான பழிவாங்கல் விபரீதம் ஒட்டுமொத்த உலக நாடுகள் மத்தியிலும் தற்பொழுது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் வறுமை மற்றும் புற்றுநோய் அவதிகளுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்கவிருந்த அந்த முதல் உன்னதத் தருணத்தில், மணமகனின் சகோதரி திடீரென மணமகள் அறைக்குள் அசுர வேகத்தில் புகுந்துள்ளார். தான் கொண்டு வந்திருந்த கருப்பு பெயிண்ட்டை மணமகளின் அழகிய திருமண ஆடை மீது அடியோடு ஊற்றிச் சிதைத்து, அவரது வாழ்நாள் கனவை முற்றிலும் பாழாக்கியுள்ளார்.

https://twitter.com/nmr2776/status/2094593134328238567/video/1

Advertisement

இருப்பினும், அந்த இக்கட்டான அவமானச் சூழ்நிலையிலும் அசாத்திய துணிச்சல் காட்டிய அந்த மணமகள், அதே கருப்பு பெயிண்ட் கறை படிந்த ஆடையுடனேயே திருமண மேடைக்குச் சென்று தனது திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்த அராஜகச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளியான நாந்தனாருக்குப் 10 மாதங்கள் கடுமையான சிறைத்தண்டனை, 160 மணிநேரச் சமூக சேவை மற்றும் 10 ஆண்டுகள் மணமகள் அருகில் வரக் கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மணமகளுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; பொறாமைத் தீயால் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்க முயன்றவருக்குக் கிடைத்துள்ள இந்த அதிரடித் தீர்ப்பு தற்பொழுது சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in