LATEST NEWS
“வரலாற்றிலேயே இல்லாத பேரதிர்ச்சி..! முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு… கோடீஸ்வர தொழிலதிபருக்கு ஐகோர்ட் கொடுத்த மாஸ் ஆப்பு..!!”
சியோல் உயர் நீதிமன்றம், தென் கொரியாவின் 2-வது மிகப்பெரிய தொழில் அதிபரான சே டே-வோன் மற்றும் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங் ஆகியோரின் பிரிவினை வழக்கில் முன் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு முக்கியத் தீர்ப்பை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தொழிலதிபர் சே டே-வோன் தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக சுமார் ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த பிரம்மாண்ட இழப்பீட்டுத் தொகையைத் தனது நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யாமல், முழுமையாக ரொக்கமாகவே வழங்கிட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. தென் கொரிய நாட்டின் வரலாற்றுப் பக்கங்களிலேயே விவாகரத்து வழக்கு ஒன்றில் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதுவே முதன்முறையாகும் என்பதால், இத்தீர்ப்பு உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
