BREAKING NEWS: அணைத்து அரசு பள்ளிகளுக்கும்.. அரசு முக்கிய அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING NEWS: அணைத்து அரசு பள்ளிகளுக்கும்.. அரசு முக்கிய அறிவிப்பு..!!

Published

on

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், அத்துடன் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய அசல் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, அவை உண்மையானவை தானா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் துறை சார்ந்த அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஆசிரியர்கள் தங்களின் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் முறை மற்றும் இதர நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்கள் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கையானது பள்ளிக் கல்வியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும், பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in