“அம்மா… இனி நாம வாடகை வீட்டில் இருக்க வேணாம்..” 18 வருஷத்துக்கு அப்புறம் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ வைக்கும் நிஜக் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா… இனி நாம வாடகை வீட்டில் இருக்க வேணாம்..” 18 வருஷத்துக்கு அப்புறம் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ வைக்கும் நிஜக் கதை..!!

Published

on

ராப் பாடகரான ஹரிஷ் தாக்கூர், தான் சிறுவனாக இருந்தபோது பெற்றோர்கள் மற்றும் நான்கு சகோதரர்களுடன் 10க்கு 10 அடி கொண்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையிலும், தான் பெரியவனாக வளர்ந்ததும் ஒரு பெரிய வீட்டில் உங்களை குடியிருக்க வைப்பேன் என்று தனது அம்மாவிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில் தனது வாழ்க்கையில் கடினமாக உழைத்த அவர், சிறிது சிறிதாக பணத்தை சேமிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, தான் சேமித்து வைத்த பணத்திலிருந்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார். தொடர்ந்து தனது பெற்றோர்களைப் புதிய வீட்டிற்கு அழைத்து வந்த அந்த இளைஞர், வீட்டின் சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதனை அவர் ஒரு வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த வீடியோ பதிவில், தான் சிறுவனாக இருந்தபோது குடும்பத்திற்குத் தேவையான அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதற்காகத் தனது தந்தை கடினமாக உழைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், தந்தையால் கடைசி வரை ஒரு வீட்டை வாங்க முடியாமல் போனதையும் குறிப்பிட்டுள்ள ஹரிஷ், புதிய வீட்டின் பெயர் பலகையில் தனது பெற்றோர்களின் பெயர்களைப் பார்ப்பது நம்ப முடியாத ஒன்றாக இருப்பதாகவும், ஒவ்வொரு மகனும் இத்தகைய மகிழ்ச்சியான நாளை நிச்சயமாகத் தங்கள் வாழ்க்கையில் காண்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in