LATEST NEWS
“வாழ்க்கை ஓட்டத்துல இத மறந்துட்டேன்…” சம்பளம், கெத்து எல்லாத்தையும் விட்டுட்டு சொந்த ஊருக்கு போன IAF அதிகாரி… காரணம் தெரிஞ்சா சல்யூட் அடிப்பீங்க..!!
உத்தரகான்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா சந்தோலா. இவர் இந்திய ராணுவத்தின் விமானப்படையில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா தற்காலிகமாக தனது விமானப்படை பணியிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், “என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என நான் உணர்ந்தேன். என் பெற்றோருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, அவர்களுக்கு என் உதவி தேவைப்பட்டது. வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்துக்கொண்டு, நான் நேசிக்கும் மனிதர்களுக்காக நேரம் ஒதுக்க விரும்பினேன். எனக்குள் எப்போதும் ஒரு படைப்பாற்றல் மிக்க பக்கம் இருந்தது. ஆடைத்துறையைத் தேர்ந்தெடுப்பது எனக்கு இயல்பாகப் பொருந்தியது. தன் குழந்தைகளுடன் இருக்க விரும்பும், வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து நிதானமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண அம்மாதான் நான்” எனப் பதிவிட்டுள்ளார்.
விமானப்படையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, தனது சொந்த மாநிலமான உத்தரகண்டின் டேராடூன் நகருக்கு திரும்பிய ஐஸ்வர்யா, அங்கு ‘புல்தெய்’ என்ற பெயரில் பிரத்யேக பாரம்பரிய துணிக்கடை மற்றும் ஸ்டுடியோவை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். ‘புல்தெய்’ என்பது உத்தரகான்டின் புகழ்பெற்ற வசந்த கால மலர் திருவிழாவை குறிக்கும். அதன் நினைவாக, வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக அவர் தனது கடைக்கு இப்பெயரை சூட்டியுள்ளார்.
அவர் பகிர்ந்த இந்த உருக்கமான மற்றும் ஊக்கமளிக்கும் காணொளி, லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. குடும்பத்திற்காக, எளிய வாழ்க்கைக்காக அவர் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவைப் பாராட்டி, சமூக வலைதளங்களில் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
