நான் MLA பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? மக்கள் முன்பாக மேடையில் உண்மையை உடைத்த தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் MLA பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? மக்கள் முன்பாக மேடையில் உண்மையை உடைத்த தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்..!!

Published

on

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது பிரசாரக் கூட்டத்தில் அதிரடியான விளக்கங்களை முன்வைத்துள்ளார். தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பல்வேறு விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “மதுராந்தகம் தொகுதி மக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் மட்டுமே நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்ததற்கான அரசியல் காரணத்தையும் அவர் பகிரங்கமாக உடைத்தார். திராவிட முன்னேற்றக் கழகமும் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ( திரைமறைவில் கூட்டு சேர்ந்து, ஒன்றாக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முயன்றதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த திமுகவை தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்தாரோ, அதே கட்சதியுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க அதிமுக தலைமை முயன்றதாக மரகதம் குமரவேல் சாடினார். ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமான இந்த அரசியல் முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே, அந்த முடிவை மிகத்தீவிரமாக எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். தற்பொழுது தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுராந்தகம் தொகுதி மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in