LATEST NEWS
யாரும் எதிர் பார்க்காத ட்விஸ்ட்.. இன்னொரு கட்சித் தலைவரை மா.செ.வாக நியமித்த CM விஜய்.. மதுரை அரசியலில் திடீர் திருப்பம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநகர் மத்திய மாவட்டச் செயலாளராக முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள இவர், ஏற்கனவே மதுரை மத்தி தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் அறிவித்த மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர், மற்றொரு கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
