பதவி பறிப்பால் விபரீதம்.. ராமேஸ்வரத்தில் தவெக நிர்வாகி தற்கொலை… மா.செ மலர்விழி மீது உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பதவி பறிப்பால் விபரீதம்.. ராமேஸ்வரத்தில் தவெக நிர்வாகி தற்கொலை… மா.செ மலர்விழி மீது உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Published

on

பதவியை பறித்து இழிவுபடுத்தியதாக கூறி ராமேஸ்வரம் தமிழக வெற்றி கழக நிர்வாகி பரந்தாமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி தான் காரணம் என உயிரிழந்த பரந்தாமனின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தங்கள் மீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருவதாக மலர்விழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே, பரந்தாமனின் மரணத்திற்கு நீதி கோரியும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெறப்போவதில்லை என்றும் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், உறவினர்கள் தங்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு வாபஸ் பெற்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in