“டம்மி முதல்வர்… துறையே தெரியாத அமைச்சர்கள்… மொத்தத்தில் தவெக ஒரு ஜோக்கர்கள் கூட்டம்..!” அண்ணா அறிவாலயத்தில் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டம்மி முதல்வர்… துறையே தெரியாத அமைச்சர்கள்… மொத்தத்தில் தவெக ஒரு ஜோக்கர்கள் கூட்டம்..!” அண்ணா அறிவாலயத்தில் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்..!!

Published

on

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு வந்தது. நின்றால் கைது, நடந்தால் கைது என டைம் டேபிள் போட்டு கைது செய்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமில்லை, ஆட்சியில் இருக்கும் சர்க்கஸ் கூட்டமே எதிர்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது. என்னை கைது செய்து தஞ்சை அழைத்துச் சென்றபோது, டிரிப் செல்வது போல ஜாலியாக சென்றோம். டம்மி முதல் அமைச்சர் என்று கூறியதற்காக கைது செய்ய வந்திருக்கிறார்களோ என நினைத்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவிரியில் தண்ணீர் வரவில்லை எனப் பேசியதால் கைது செய்தனர். காலை 10.30 மணி வரை கைது ஆகக்கூடாது என ஸ்டாலின் அப்போது என்னிடம் கூறினார். மின்னல் வேகத்தில் திமுக வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டம் நடத்தினர். என்னை போலீசார் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். கைது செய்து மிரட்டிப் பார்க்கிறது தவெக அரசு. தேர்தலுக்குப் பின் சோர்ந்து இருந்த திமுகவினர், என்னைக் கைது செய்ததால் மீண்டும் பழைய பாணிக்குத் திரும்பிவிட்டனர். சரியான நேரத்துக்குக் காபி, ஜூஸ் வழங்கினர்” எனக் கூறினார்.

Advertisement

மேலும், “யார் அமைச்சர்கள், யார் எம்.எல்.ஏ.க்கள் என்று நமது டம்மி முதல்வருக்கே தெரியவில்லை. திமுகவின் வரலாறு தவெகவுக்குத் தெரியவில்லை. திமுக ஜென்சி அணியினரையும் போலீசார் மூலம் மிரட்டுகிறார்கள். திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனையும் கைது செய்து மிரட்டிப் பார்த்தார்கள். தட்டுத்தடுமாறி அதிகாரத்துக்கு வந்துள்ளது புதிய கோஷ்டி. என்னைக் கைது செய்துவிட்டு கைது செய்யும் எண்ணம் இல்லை என்று கோர்ட்டில் கூறியது தவெக அரசு. சட்டப்பேரவையில் அமைச்சர்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஒரு பதில் தருகிறார்கள். அமைச்சர்களுக்கு எந்தத் துறையை வகிக்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. சீட்டுக்கட்டில் ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்கள் இருப்பார்கள். ஆனால், தவெகவில் அனைத்துமே ஜோக்கர்கள்தான் உள்ளனர். நாம் எந்தவிதச் செலவும் செய்யாமல் ரோடு ஷோ செய்ய இந்த அரசு உதவியுள்ளது. திமுகவினர் இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். இனி போகப் போக அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பிரச்சினையில் மாட்டுவார்கள்” என்றும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in