“எமனைக் கண்முே பார்த்த பயணிகள்..!” ஒரே எண்ணைக் கொண்ட இரு விமானங்கள் மோதவிருந்த பகீர் தருணம்… அடுத்த நொடியே கட்டுப்பாட்டாளர் செய்த அதிசயம்.. பீனிக்ஸ் வானில் நடந்த திகிலூட்டும் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எமனைக் கண்முே பார்த்த பயணிகள்..!” ஒரே எண்ணைக் கொண்ட இரு விமானங்கள் மோதவிருந்த பகீர் தருணம்… அடுத்த நொடியே கட்டுப்பாட்டாளர் செய்த அதிசயம்.. பீனிக்ஸ் வானில் நடந்த திகிலூட்டும் சம்பவம்…!!

Published

on

சிகாகோவிலிருந்து அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாகத் தாமதமானது. இதனால் அடுத்த பயணத்திற்காக மற்றொரு விமானத்தைப் பயன்படுத்துமாறு விமான நிறுவனம் கூறியதுடன், அதிகாரிகள் புதிய விமானத்திற்கு ஏற்பாடு செய்து பயணிகளை அதே 2482 எண் கொண்ட மற்றொரு விமானத்தில் ஏறச் செய்தனர்.

இதற்கிடையே, தாமதமாக வந்த அதே எண் கொண்ட விமானம் தரையிறங்க முயன்றபோது, ஃபீனிக்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த அதே 2482 எண் கொண்ட மற்றொரு விமானத்துடன் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட விமான நிலையக் கட்டுப்பாட்டாளர், வருகிற மற்றும் புறப்படுகிற விமானங்களை உடனடியாக வேறுபடுத்தி காட்டினார்.

Advertisement

கட்டுப்பாட்டாளர் தனது 25 ஆண்டுகால நீண்ட கால அனுபவத்தைப் பயன்படுத்தி, இரு விமானங்களும் பாதுகாப்பான செங்குத்து இடைவெளியைக் கடைப்பிடித்து ஒன்றையொன்று கடந்து செல்ல வழிகாட்டினார். இதனால் பேரழிவாக மாறியிருக்கக் கூடிய ஒரு பெரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டதுடன், நிலைமையைச் சிறப்பாகக் கையாண்ட கட்டுப்பாட்டாளரை விமானிகளும் வெகுவாகப் பாராட்டினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in