“ஸ்டாலினே மன்னிப்புக்கேள்” பெண்களைக் கேலி பேசும் திமுகவின் கேடுகெட்ட DNA… அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினே மன்னிப்புக்கேள்” பெண்களைக் கேலி பேசும் திமுகவின் கேடுகெட்ட DNA… அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பதிவு..!!

Published

on

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்யபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில், தவெகவைச் சேர்ந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் திமுக தலைவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். “திமுக தலைவரே மன்னிப்பு கேள்! பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே மன்னிப்பு கேள்!” என்று அவர் தனது எக்ஸ் பக்கப் பதிவில் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் தனது பதிவில் ஒரு கவிதையையும் பகிர்ந்து திமுகவைச் சாடியுள்ளார். அதில், “பெண்களைக் கேலி பேசும் DNA , அது திமுகவின் கேடுகெட்ட டி.என்.ஏ ! நிலை மாறினால் குணம் மாறுவான், பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்!” என்று பதிவிட்டு, #ஸ்டாலினே_மன்னிப்புகேள் என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in