LATEST NEWS
“என் மகளை என்னிடம் ஒப்படையுங்கள்..!” நீதிமன்ற வாசலில் கதறி அழுத தந்தை… நெட்டிசன்களை கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
கடந்த ஆகஸ்ட் 30 அன்று நடந்த கப்பல் விபத்தில் தனது 3 வயது மகளைக் இழந்த தந்தை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது “என் மகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கதறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் கிரீனில் அரங்கேறியுள்ளது. தந்தை சலீம் ஹிலாலோக்லு, தனது 35 வயது மனைவி நூர்சான், 5 வயது மகன் மிரான் அசாஃப் மற்றும் 3 வயது மகள் அன்னீ அசெல் ஆகியோருடன் அந்தப் பயணியர் கப்பலில் பயணித்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. விபத்தின் முதல் நாளிலேயே மனைவி நூர்சானின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டு அவரது சொந்த ஊரான உருஃபாவில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 5 வயது மகன் மிரான் அசாஃபிற்கு தற்போது துருக்கியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை சலீம் ஹிலாலோக்லு காயங்களுடன் உயிர் பிழைத்த போதிலும், அவரது 3 வயது மகள் அன்னீ அசெல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விபத்து நடந்து நாட்களாகியும் சிறுமியைத் தேடும் பணிகள் கடற்பகுதியில் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கப்பல் நிறுவன இயக்குனர் அலி ஓஸ்டுல்கர், கேப்டன் முஸ்தபா ஓஸ், இரண்டாவது கேப்டன் மெர்வே நூர் செரார்ஸ்லான் மற்றும் பணியாளர்கள் உட்பட 9 பேர் கிரீன் விபத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்ற வாசலில் காத்திருந்த தந்தை சலீம் ஹிலாலோக்லு, தன் மகளைத் தொலைத்த வேதனையில் “என் மகளை என்னிடம் ஒப்படையுங்கள்” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.
