“ஐயோ இன்னும் 3 மாதத்தில் திருமணம்… கண் முன்னே துடிடித்த மகள்… கதறி அழுத தந்தையின் நிலைகுலைந்த தோற்றம்.. நெஞ்சைச் சுக்குநூறாக உடைக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ இன்னும் 3 மாதத்தில் திருமணம்… கண் முன்னே துடிடித்த மகள்… கதறி அழுத தந்தையின் நிலைகுலைந்த தோற்றம்.. நெஞ்சைச் சுக்குநூறாக உடைக்கும் சோகம்..!!

Published

on

சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகே அவர்கள் வந்துகொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக அவர்களின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இருவரும் கீழே விழுந்த நிலையில், பைக்கில் பின்புறமமம அமர்ந்திருந்த திருநிறைச்செல்வியின் தலையின் மீது லாரியின் டயர் ஏறிய இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கண் முன்னே மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து தந்தை மகேந்திரன் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியதுடன், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் உடனடியாக விரைந்து வந்து, உயிரிழந்த திருநிறைச்செல்வியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பின் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

வரவிருக்கும் வாரத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் எனப் பல கனவுகளுடன் இருந்த இளம் பெண், விதியின் வடிவத்தில் வந்த லாரியால் தந்தை கண்முன்னே பலியான இச்சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. தன் மகளின் எதிர்காலத்தைக் கண் குளிரக் காண வேண்டிய தந்தை, அவளது உயிரற்ற உடலின் அருகே துடிதுடித்து நிற்கும் இந்தக் காட்சி காண்போரின் நெஞ்சை நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in