பெட்ரோல் கம்மியா இருக்கு!” கேள்வி கேட்ட ஆசிரியரை… தாடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல்..! பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அராஜகத்தால் கொந்தளிப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

பெட்ரோல் கம்மியா இருக்கு!” கேள்வி கேட்ட ஆசிரியரை… தாடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல்..! பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அராஜகத்தால் கொந்தளிப்பு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மதராஸா ஆசிரியரான மௌலானா முகமது இக்பால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்வா குல்ஹரியா பகுதியைச் சேர்ந்த இவர், மதராஸா அஸ்ஹருல் உலூம் கத்கோராவில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காக கேன்ஸடீ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதேஹ்னா பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். பெட்ரோல் போட்ட பிறகு, ஊற்றிய அளவு குறைவாக இருப்பதாக அவர் பங்க் ஊழியர்களிடம் முறையிட்டபோது ஊழியர்கள் கோபமடைந்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மௌலானா தேவையற்ற முறையில் கெட்ட வார்த்தைகளால் திட்டியதை எதிர்த்ததால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினர். தாக்குதலின் போது, ஊழியர்கள் அவரது தாடியைப் பிடித்து இழுத்து, அவரைத் தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினர். இந்த தாக்குதலின் போது மௌலானாவின் தொப்பியும் கழன்று விழுந்ததுடன், அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியுள்ளார். இந்த முழுச் சம்பவத்தையும் யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், மதத் தலைவரைத் தாக்கி தாடியைப் பிடித்த இழுத்த இந்தச் செயலுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்

Advertisement

.https://www.facebook.com/watch/?v=1854451619270797

https://www.facebook.com/watch/?v=1854451619270797

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மௌலானாவைச் சந்தித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மௌலானா முகமது இக்பால் கேன்ஸடீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தம்மைத் தாக்கிய அராஜகமான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த பெட்ரோல் பங்கில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in