CRIME
“அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை” கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 20 வயது பெண்.. வாடகை வீட்டில் அரங்கேறிய பயங்கரம்… அந்த ஒரு வார்த்தையாழ் வாழ்க்கையே முடிந்த சோகம்..!!
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சோட்டி உபாத்யாய், ரிஷப் குமார் சிங் என்பவரைக் காதலித்து மறுமணம் செய்து கொண்டார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள சில்வாசா பகுதிக்குச் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், தன்னைத் கணவரின் சொந்தக் குடும்பத்தினருடன் வாழ அழைத்துச் செல்லுமாறு சோட்டி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி இருவருக்குள்ளும் இடையே எழுந்த கடுமையான தகராறில் சோட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை வீட்டின் உள்ளேயே மறைத்து வைத்துவிட்டு, ரிஷப் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இக்கொடூர சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தத் துயரச் செய்தி வெளி உலகுக்கு தெரியவந்தது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி, வீட்டின் உரிமையாளர் புதிய வாடகைதாரருக்கு வீட்டைக் காட்டுவதற்காகச் சென்றபோது, நிலவிய சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையால் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த சில்வாசா போலீஸார், வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் இருந்த சோட்டியின் உடலைக் கைப்பற்றி அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து தப்பியோடிய ரிஷப்பை தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.
ரிஷப் உத்தரப் பிரதேசத்தின் வாராணசி பகுதியில் தலைமறைவாக இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையும் காவல்துறையும் இணைந்து நடத்திய சோதனையில், தொழிற்பேட்டைப் பகுதியில் போலி அடையாளத்துடன் கூலி வேலை செய்து வந்த ரிஷப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
