“கனவுல வந்து அம்மா கூப்பிடுறாங்க… வா நாமும் செத்துடலாம்” மறுத்த மனைவியை கொன்று கணவன் செய்த விபரீதம்… போனில் சிக்கிய பகீர் செல்ஃபி வீடியோ.. ஆந்திராவை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கனவுல வந்து அம்மா கூப்பிடுறாங்க… வா நாமும் செத்துடலாம்” மறுத்த மனைவியை கொன்று கணவன் செய்த விபரீதம்… போனில் சிக்கிய பகீர் செல்ஃபி வீடியோ.. ஆந்திராவை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான லட்சுமண் ராவ் (32) மற்றும் சியாமளா (30) ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பிறகு திருப்பதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் லட்சுமண் ராவின் தாய் திடீரென உயிரிழந்ததால், தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த லட்சுமண் ராவ் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். “அம்மா அடிக்கடி என் கனவில் வந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார், நாமும் தற்கொலை செய்து கொண்டு தாயிடம் சென்றுவிடலாம்” என்று மனைவியிடம் கூறி வேதனைப்பட்டு வந்த லட்சுமண் ராவை, சியாமளா தொடர்ந்து தடுத்து ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள அவர்களின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமண் ராவ் மற்றும் சியாமளா ஆகிய இருவரும் வீட்டிற்குள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லட்சுமண் ராவின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த செல்ஃபி வீடியோ ஒன்று கைபற்றப்பட்டது. அதில், தாயின் மரணத்தைத் தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், தன்னுடன் தற்கொலை செய்து கொள்ள மனைவி சம்மதிக்காததால் அவரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் லட்சுமண் ராவ் பேசியிருந்தது தெரியவந்தது. தாயின் பிரிவால் மாற்றுத்திறனாளி கணவன் மனைவியைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in