LATEST NEWS
கொசுக்களுக்கு வந்த சோதனை..! 3 செகண்ட்ல மொத்தமும் காலி… AI டெக்னாலஜியில் சீனா செஞ்ச புது மேஜிக்… லேசர் வச்சு கொசுவையே முடிச்சிட்டாங்க..!!
சீனாவின் சாங்சோ பகுதியைச் சேர்ந்த ‘போட்டான் மேட்ரிக்ஸ் லேப்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், வான்வெளி பாதுகாப்பு அமைப்பைப் போன்று செயல்பட்டு கொசுக்களை அழிக்கும் அதிநவீன லேசர் சாதனத்தை உருவாக்கியுள்ளது. ‘போட்டான் மேட்ரிக்ஸ்’ என அழைக்கப்படும் இந்த கையடக்கக் கருவி, மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்குப் பதிலாக பறக்கும் கொசுக்களை மட்டும் துல்லியமாகக் கண்டறிந்து லேசர் கற்றைகள் மூலம் சுட்டு வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கருவி “லைடார்” தொழில்நுட்பம் மற்றும் AI கேமரா வாயிலாகச் செயல்படுகிறது. இது சுமார் 3 முதல் 6 மீட்டர் சுற்றளவுக்குள் 90 டிகிரி கோணத்தில் லேசர் கற்றைகளைச் செலுத்தி, காற்றில் பறக்கும் பூச்சிகளின் அளவு, நகரும் வேகம் மற்றும் தூரத்தை வெறும் 3 மில்லி விநாடிகளுக்குள் கணக்கிடுகிறது. கொசுக்கள் சுழன்று பறக்கும்போது, லேசர் கற்றைகள் அதன் இறக்கைகளைத் துல்லியமாகத் தாக்கி அவற்றை வீழ்த்துகின்றன. ஒரு வினாடிக்கு சுமார் 30 கொசுக்கள் வரை அழிக்கும் திறன் கொண்டது என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
வேதிப்பொருள்கள் மற்றும் புகை ஏதுமின்றி முழு இருளிலும் செயல்படும் இக்கருவி, வீட்டின் அறைக்குள்ளும் வெளிப்புறத்திலும் பயன்படுத்த ஏற்றது. மனிதர்களோ அல்லது செல்லப்பிராணிகளோ இதன் எல்லைக்குள் வரும்போது லேசர் தானாக இயங்குவதை நிறுத்தும் வகையில் பாதுகாப்பு அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவதைப் போன்ற இந்த லேசர் கொசு ஒழிப்பு சாதனம், உலகளவில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்று வருகிறது.
