“இன்ஸ்டா நண்பனை மறக்க மறுத்த மனைவி”   ஓடும் ஆட்டோவில் கணவன் செய்த கொடூரம்… சாலை எங்கும் சிதறிய ரத்தம்.. கதறிய குழந்தைகள்… அம்பத்தூரை உலுக்கிய ஆட்டோ கொலை சம்பவம்..! – cinefeeds
Connect with us

CRIME

“இன்ஸ்டா நண்பனை மறக்க மறுத்த மனைவி”   ஓடும் ஆட்டோவில் கணவன் செய்த கொடூரம்… சாலை எங்கும் சிதறிய ரத்தம்.. கதறிய குழந்தைகள்… அம்பத்தூரை உலுக்கிய ஆட்டோ கொலை சம்பவம்..!

Published

on

சென்னை அம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சின்னா (32) என்பவருக்கும், வைதேகி (28) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், வைதேகிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சின்னா மனைவியைக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு தீவிரமடைந்ததை அடுத்து, வைதேகி தன் குழந்தைகளுடன் திருமுல்லைவாயிலில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சின்னா, வைதேகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்பத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த வைதேகியை வெளியே செல்லலாம் என அழைத்துக் கொண்டு, ஆட்டோவை வைதேகியை ஓட்டச் சொல்லிவிட்டு சின்னா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். பயணத்தின் போது, ஆண் நண்பருடனான தொடர்பைக் கைவிட்டு மீண்டும் தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று சின்னா கூறியுள்ளார். அதற்கு வைதேகி மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சின்னா, அம்பத்தூர் மேனாம்பேடு அருகே சென்றபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, சடலத்தைச் சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து வைதேகியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சின்னாவை அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியில் வைத்துக் கைது செய்தனர். தாய் உயிரிழந்த நிலையிலும், தந்தை சிறைக்குச் சென்ற நிலையிலும் அவர்களின் இரு சிறு குழந்தைகளும் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in