CINEMA
“நிலவுக்கு பக்கத்துல போனேன்…” 7 நிமிஷம் செத்து பொழச்ச பிரபல நடிகர் பகிர்ந்த திகில் அனுபவம்..!!
இந்திய வம்சாவளி ஆங்கில நடிகரான ஷிவ் க்ரூவல், தான் உயிரிழந்த 7 நிமிடங்களுக்குள் மீண்டும் உயிர் பிழைத்து வந்த அதிர்ச்சியூட்டும் அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனது மனைவியுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருடைய இதயம் இயங்குவது நின்று, சில நிமிடங்கள் அவர் உயிரிழந்த நிலைக்குச் சென்றார்.
அந்த 7 நிமிட மரண அனுபவத்தைப் பற்றிப் பேட்டியில் விவரித்த அவர், “அந்தச் சமயத்தில் என் உடல் காற்று போல மாறியதை உணர்ந்தேன். உடலின் எடை முற்றிலும் குறைந்து, நீரில் மிதப்பது போன்ற ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. மேலும், நான் நிலவுக்கு அருகில் பயணம் செய்வது போலவும் உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால் கிட்டத்தட்ட 7 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு உயிர் திரும்பிய நிலையில், இந்த விநோதமான அனுபவம் குறித்து அவர் அளித்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
