இதென்ன கொடுமை..? நைட் சாப்பிட்டு வாக்கிங்க் சென்ற இளம்பெண்… சிறிது நேரத்தில் துடிதுடித்து மரணம்… பெரும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதென்ன கொடுமை..? நைட் சாப்பிட்டு வாக்கிங்க் சென்ற இளம்பெண்… சிறிது நேரத்தில் துடிதுடித்து மரணம்… பெரும் சோகம்..!!

Published

on

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பேனியில், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் அக்ஷிதா மாரடைப்பு காரணமாகத் திடீரென காலமானார். தெலங்கானாவின் பிரபல தொழிலதிபரான நல்லமலா ஆனந்த் என்பவரின் மகளான அக்ஷிதா, அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதே ஆன இளம் பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது சொந்த ஊரான கம்மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல் இரவு நேரத்தில் அக்ஷிதா தனது இருப்பிடத்திற்கு அருகே நடைப்பயிற்சி (Walking) மேற்கொண்டு இருந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு நிலைதடுமாறி தரையில் சுருண்டு விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மகள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் நல்லமலா ஆனந்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் அக்ஷிதாவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அவரது உடல் சொந்த ஊரான கம்மத்திற்கு கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in