“அய்யோ என்னாச்சு..” ஹோட்டல் மேஜையிலேயே சுருண்டு விழுந்த 42 வயது நபர்.. சாப்பிடும் போது நேர்ந்த பயங்கரம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ என்னாச்சு..” ஹோட்டல் மேஜையிலேயே சுருண்டு விழுந்த 42 வயது நபர்.. சாப்பிடும் போது நேர்ந்த பயங்கரம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கொட்டிகெரே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், 42 வயதான சந்துரு என்ற நபர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மேஜை மீதே சுருண்டு விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னராயப்பட்டணாவைச் சேர்ந்த சந்துரு, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள ‘குரு கிரீன்ஸ் பேமிலி ரெஸ்டாரண்டில்’ பார் காசாளராகப் பணியாற்றி வந்தார். அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 11:40 மணியளவில் உணவகத்தில் அமர்ந்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்தவர் அடுத்த சில நொடிகளிலேயே சுயநினைவை இழந்து குப்புற மேஜையின் மீது சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவகத்தின் ஊழியர்கள் உடனடியாக அவரிடம் ஓடிவந்து, அவரது தலையில் தண்ணீரை ஊற்றியும், முதலுதவியாக சிபிஆர் எனப்படும் இதய மீட்புச் சிகிச்சையையும் அளித்து அவரைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடினர். எனினும் அவர் கண் விழிக்காததால், உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சந்துரு சாப்பிட்டுக் கொண்டே மாரடைப்பால் சுருண்டு விழுந்ததும், சக ஊழியர்கள் பதறியடித்துக் காப்பாற்ற முயன்றதுமான இந்த ஒட்டுமொத்த பதைபதைக்க வைக்கும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து ஹுலிமாவு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in