LATEST NEWS
“விஜய் மாமா காப்பாத்துங்க ஊரையே இடிக்குறாங்க.” கண்ணீர் விட்டு அலறிய குழந்தைகள்.. முதலமைச்சர் வாகனத்தை வழிமறித்ததால் பரபரப்பு..!!
திருச்சி செம்பட்டு கிராமத்தில் தனியார் கல்லூரி விரிவாக்கத்திற்காக பொதுமக்களின் வீடுகளை அகற்றி, கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
https://x.com/sunnewstamil/status/2117171047535702245/video/1
இந்தச் சூழ்நிலையில், பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகச் சாலை மார்க்கமாகப் பயணித்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனத்தை, திருச்சி விமான நிலையப் பகுதியில் திரண்டிருந்த செம்பட்டு கிராம மக்கள் திடீரென வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் கிராம மக்களும் முதலமைச்சரின் காரைச் சூழ்ந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது, காரில் இருந்த முதலமைச்சரை நோக்கி, “விஜய் மாமா காப்பாத்துங்க… ஊரையே இடிக்குறாங்க” எனச் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் முழக்கமிட்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இருப்பினும், அங்கு நிலவிய பாதுகாப்பு வளையம் மற்றும் பரபரப்பான சூழல் காரணமாக, மக்களின் இந்த விபரீதக் கோரிக்கையை அறியாத முதலமைச்சர் விஜய் அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து சென்றுவிட்டார்.
