பகீர் … நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கள்ளகாதலனுக்கு நேர்ந்த விபரீதம்… மாட்டிக்கக் கூடாதுனு காதலி செய்த காரியம்..மனைவியின் ஒரே புகாரால் வெடித் தெறித்த உண்மை.. நெல்லையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர் … நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கள்ளகாதலனுக்கு நேர்ந்த விபரீதம்… மாட்டிக்கக் கூடாதுனு காதலி செய்த காரியம்..மனைவியின் ஒரே புகாரால் வெடித் தெறித்த உண்மை.. நெல்லையில் பரபரப்பு..!!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் பன்றி பண்ணை அதிபர் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 இரவு கரையிருப்புச் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், நாங்குநேரி டிஎஸ்பி சதிஸ்கண்ணன் மற்றும் ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையிலான களக்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ராமகிருஷ்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற 44 வயது பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. குடும்பத்தினர் கண்டித்தும் தொடர்ந்த இந்த உறவின் பின்னணியில், சம்பவத்தன்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற ராமகிருஷ்ணனுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, விஷயம் வெளியில் தெரிந்தால் தனக்குச் சிக்கல் ஏற்படும் என அஞ்சி, சடலத்தை வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று நடுரோட்டில் வீசியது அம்பலமானது.

Advertisement

உண்மையை மறைத்து உடலை அப்புறப்படுத்த முயன்ற குற்றத்திற்காகப் போலீசார் சத்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பன்றி பண்ணை உரிமையாளர் கள்ளக்காதலி வீட்டில் உயிரிழந்ததும், அவரது சடலம் சாலையில் தூக்கி வீசப்பட்டதும் களக்காடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in