“வீட்ல சாப்பிட ஒண்ணுமே இல்லைப்பா..!” குடிபோதை அப்பாவால் தவித்த குழந்தைகள்.. புகார் கொடுக்க வந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த சப்-இன்ஸ்பெக்ட செய்த ‘மாஸ்’ காரியம்.. வைரல் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீட்ல சாப்பிட ஒண்ணுமே இல்லைப்பா..!” குடிபோதை அப்பாவால் தவித்த குழந்தைகள்.. புகார் கொடுக்க வந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த சப்-இன்ஸ்பெக்ட செய்த ‘மாஸ்’ காரியம்.. வைரல் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச காவல் துறையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் ஸ்ரீ லட்சுமிகாந்த் சைங்கர், பசியால் தவித்த ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து மனிதநேயத்தின் உன்னத அடையாளமாகத் திகழ்ந்துள்ளார். குடிபோதையில் கணவர் தன்னை அடிப்பதாகவும், வீட்டில் குழந்தைகளுக்குச் சாப்பிட ஒரு பருக்கை உணவு கூட இல்லை என்றும் கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். விவகாரத்தைக் கேட்டறிந்த சார்பு ஆய்வாளர் உடனடியாக அப்பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று சோதனையிட்ட போது, அங்கு ரேஷன் பொருட்கள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் உண்மையில் பசியால் வாடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குழந்தைகளின் கடுமையான பசித் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சார்பு ஆய்வாளர் சைங்கர், உடனடியாக அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளைத் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து தந்துள்ளார். அதோடு நிறுத்தாமல், அந்தப் பெண்ணின் கணவருக்குப் பாசத்துடன் அறிவுரை கூறி, மதுப் பழக்கத்திற்காகத் தனது சொந்தக் குடும்பத்தையே ஏன் அழிக்கத் துணிகிறாய் என்று புரிய வைத்துள்ளார்; காவல்துறையினரின் இந்த அன்பான பேச்சைக் கேட்டு மனமாற்றமடைந்த அந்த நபர், இனிமேல் மது அருந்திவிட்டு இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என்று கண்ணீருடன் உறுதியளித்துள்ளார். மற்ற காவலர்களைப் போலக் குற்றவாளியைச் சிறையில் அடைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பசியால் தவித்த குடும்பத்திற்கு நேசக் கரம் நீட்டிய இந்த அதிகாரியின் மனிதநேயச் செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in