CRIME
“அடச்சீ.. 3 மணிநேரம் அறையில் பூட்டி வன்கொடுமை,,?!” கணவருக்கு உடந்தையாக இருந்த மனைவி.. பிரபல பங்குச்சந்தை ஆலோசகரரின் கொடூர முகம்.. பெண் செய்தியாளர் கொடுத்த பகீர் பாலியல் புகார்..!!
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான தொடர்பைப் பயன்படுத்தி, பி.ஆர். சுந்தர் தனக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 3 மணி நேரம் அடைத்து வைத்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அச்சுறுத்தியதாகவும் அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பி.ஆர். சுந்தரின் மனைவி மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் வர்த்தகம் குறித்த ஆலோசனைகளை வழங்கி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெருமளவில் அறியப்பட்டவர் பி.ஆர். சுந்தர். சமூக வலைதளங்களில் கணிசமான செல்வாக்குக் கொண்ட இவர் மீது இத்தகைய தீவிரக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணையில் திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
